சான்பிரான்சிஸ்கோ:
டிக்டாக்கின் அமெரிக்க சொத்துக்களை விற்க விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க கோரி சீன நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

சீனாவின் குறுகிய வீடியோ செயலியான டிக் டாகின் அமெரிக்க பங்குகளை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது, இதனைத் தொடர்ந்து விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் சீனா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் செயலியை தடை செய்தது மட்டுமல்லாமல் டிக்டாக்கின் அமெரிக்க சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், டிக் டாக் செயலியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எங்கிருந்தாலும் நவம்பர் 12 ஆம் தேதி அதனை விற்பனை செய்ய கடைசி நாள் என்றும் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது உத்தரவிடப்பட்டது. இதனால் தற்போது இந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரி டிக்டாக்கின் சீன நிறுவனம் அமெரிக்காவில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதே சமயத்தில் டிக் டாக் செயலியை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவின் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டிக் டாக் க்லோபல் என்ற செயலியை வெளியிடப் போவதாக ஓரக்கில் நிறுவனம் அறிவித்துள்ளது, ஆரக்கிள் நிறுவனம் இதனை அறிவித்தவுடன் வால்மார்ட் நிறுவனம் இதன் 7.5% பங்குகளை வாங்க போவதாக அறிவித்தது. ஆனால் இதனை அறிவித்த ஆரக்கிள் நிறுவனத்திடம் 12.5% பங்குகள் இருக்கும் என்றும் மீதி உள்ள 80% பங்குகள் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சிடம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.