தெலுங்கு டிக்டாக் பிரபலம் பார்கவ் தன்னுடன் வீடியோ வெளியிட்டு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் யூ டியூப், டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர்.

விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் பார்கவின் பக்கத்துக்கு வீட்டில் 14 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இருவரும் சேர்ந்து ”Fun Bucket” சேனலில் ஒன்றாக வீடியோ வெளியிட்டும் வந்துள்ளனர்.

அந்த 14 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது, கர்ப்பத்துக்கு பார்கவ்த்தான் காரணம் என்று சிறுமி கூறவே சம்பவம் குறித்து பெந்துருத்தி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் பார்கவை விசாரித்த போலீசார் போக்ஸோ வழக்கில் அவரை கைது செய்தனர்.