பிரபல Tiktok நட்சத்திரம் சியா கக்கர் தற்கொலை…..!

பிரபல டிக்டோக்(Tiktok) நட்சத்திரம் சியா கக்கர் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 16.

டிக்டாக்கில் சுமார் 1 மில்லியன் பேர் அவரை பின் தொடர்ந்தனர். இந்த நிலையில், அவர் திடீரென இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையினால் இருக்கலாம். வேலையைப் பொறுத்தவரை அவர் நன்றாகவே இருந்தார். சியா ஒரு பிரகாசமான திறமைசாலி” என்று அவரது மேலாளர் கூறியுள்ளார்.

தான் தற்கொலை செய்வதுகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், அவர் சமீபத்திய பஞ்சாபி பாடலுக்கு நடனமாடுகிறார். சியா தனது இன்ஸ்டா கதையில்(story) அதே பஞ்சாபி பாடலை இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தகைய சூழ்நிலையில், அவரது பதிவை பார்த்தால், அவர் எந்தவொரு மன அழுத்தத்தையோ அல்லது பிரச்சினையையோ எதிர்கொண்டதாக தெரியவில்லை என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கடந்த நான்கு-ஐந்து நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் டெல்லி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.