2ம் நாள் உணவு இடைவேளை – 187 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாளில் 2 விக்கெட்டுகளுக்கு 139 ரன்கள் என்ற நிலையிலிருந்த பாகிஸ்தான், இரண்டாம் நநாள் உணவு இடைவேளையில் 187 ரன்களுக்கு 5 விக்கெட் என்று சரிவு கண்டுள்ளது.

பெரிதான ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆஸம், முந்தைய நாள் எண்ணிக்கையான 69 ரன்களுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் அவுட்டானார். ஷான் மசூத் மட்டும் மிகவும் மெதுவான ஒரு இன்னிங்ஸ் ஆடிக்கொண்டு இன்னும் களத்தில் இருக்கிறார்.

அவர் 225 பந்துகளில் 77 ரன்களை அடித்துள்ளார். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 9 ரன்களுக்கு அவுட்டானார்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி