டில்லி

மொத்தம் இதுவரை 85,16,385 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.   அடுத்த கட்டத்தில் முதியோர்களுக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இன்று மத்திய சுகாதார இணைச் செயலர் மன்தீப் பண்டாரி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கொரோனா தடுப்பூசி தற்போதைய நிலவரம் குறித்து தகவல் அளித்தார்.  அந்த விவரம் பின் வருமாறு :

இதுவரை மொத்தம் 85,16,385 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இதில் 61,54,894 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   இதில்  620,57,162 பேருக்கு முதல் டோஸும் 97,732 பேருக்கு இரண்டாம் டோஸும் போடப்பட்டுள்ளது.