டில்லி

ன்று மாலை வரை இந்தியாவில் மொத்தம் 60,35,660 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் நாடெங்கும் தொடங்கப்பட்டது.  இதில் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனா எதிர்ப்பு முன்களப் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலர் மனோகர் அக்னானி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில் அவர், “இன்று  அதாவது 2021 ஆம் வருடம் பிப்ரவரி 8 ஆம் தேதி மாலை ஆறு மணி வரை மொத்தம் 60,35,660 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இதில் இதுவரை 54,12,770 சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  மேலும் கொரோனா எதிர்ப்பு முன் கட்ட பணியாளர்களுக்குக் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.  இதுவரை 6,23,390 கொரோனா எதிர்ப்பு முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.