சென்னை:

மிழகத்தில், ரேசன் கடைகளில் சர்க்கரை  மட்டுமே வாங்குபவர்களின் வசதிக்காக வெள்ளைக் கார்டு அறிமுகப்படுத்தபட்டிருந்த நிலையில், தற்போது சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று தமிழகஅரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அதற்கான கால அவகாசத்தை வரும் 29ந்தேதி வரை நீடித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் பல வண்ணங்களில் ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தன. தற்போது ஸ்மார்ட்டு வழங்கப்பட்டு உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது.  பச்சை ரேசன் கார்டு வைத்துள்ள கார்டு தாரர்களுக்கு  அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல அரசு வழங்கும் இலவச வேட்டி சேலை, பொங்கல் பரிசு போன்றவையும் கிடைத்து வருகிறது.

ஆனால், இதுபோன்ற எந்தவொரு சலுகையும் வெள்ளை ரேசன் கார்டுதாரர்களுக்கு கிடைப்பதில்லை. சர்ச்சை மட்டுமே வழங்கப் பட்டு வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. வெள்ளை ரேசன் கார்டு தாரர்கள் தங்களையும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையிலான பச்சை ரேசன்கார்டு தாரர்களாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,  சர்க்கரை ரேசன் கார்டுதாரர்கள், தகுதிக்கு ஏற்ப அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையிலான ரேசன்கார்டுதாரர்களாக மாற தமிழகஅரசு அனுமதி வழங்கியது.  இதற்கான விண்ணப்பங்களை  ரேசன் கார்டின் நகலுடன் இணைத்து, www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும்  அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், காலஅவகாசத்தை வரும் 29ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அனுமதித்துள்ளது.

மேலும், கார்டை மாற்ற விரும்புபவர்கள், அந்த பகுதியைச் சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையர்களிடம் நேரடியாகவும் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.