ஆராய்ச்சி படிப்பிற்கான காலவரம்பு நீட்டிப்பு – மும்பை பல்கலைக்கழகம்

பத்து ஆண்டிற்குள் பி.எச்டி. படிப்பை முடிக்க வேண்டுமென முப்பை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பி.எச்டி. படிப்பை முடிக்க அதிகபட்ச கால வரம்பு ஆறு ஆண்டுகளாக இருந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க கோரிக்கை விடப்பட்டிருந்தது. மும்பை பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படித்தவர்கள் ஆராய்ச்சிப் பணியை பத்து ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கு முன்பு பி.எச்டி மற்றும் எம்.பில். படிப்புகளுக்கு அதிகபட்ச கால வரம்புகள் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது.
mumbai university
முதல் முறையாக மும்பை பல்கலைக்கழகத்தில் படிக்கும் பி.எச்டி. மாணவர்கள் தங்கள் படிப்பை ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தேவைப்படும் மாணவர்கள் மட்டும் படிப்பை முடிக்க மேலும் நான்கு ஆண்டுகள் கால வரம்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எம்.பில். படிக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூன்று ஆண்டுகள் கால வரம்பில் இருந்து மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எம்.பில். படிக்க அதிகபட்ச காலவரம்பில் இருந்து ஒரு ஆண்டும், பி.எச்டி.படிக்க இரண்டு ஆண்டுகளும் நீட்டித்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பி.எச்டி. முடிப்பதற்கான குறைந்த பட்ச கால வரம்பு இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இத்தகைய முடிவை ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியை முடிக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாக உணருகின்றனர். இது ஒரு நல்ல முடிவாக இருந்தாலும் ஆராய்ச்சி படிப்பை முடிக்க பத்து ஆண்டுகள் எடுத்து கொள்வது நீண்ட நாள்கள் படிக்கும் உணர்வை தரும் என்றும், தொடர்ந்து முயற்சி செய்தால் 4 ஆண்டுகளில் ஆராய்ச்சி படிப்பை முடிக்கலாம் என்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.