பான், ஆதார் இணைப்புக்கு டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

டில்லி:

பான் எண்ணுடன் ஆதார் இணைக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஆதார் எண் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஒரு பக்கம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தே ஆக வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

பான், ஆதார் எண்களை இணைக்க இன்று (31ம் தேதி) கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிட்டால் வருமான வரி கணக்குகளை ஏற்கமாட்டோம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பான், ஆதார் எண்களை இணைக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.