தாய்லாந்து அரசர் : 100 சுவாரசியமான மனிதர்களில் ஒருவர்

தாய்லாந்து.

லகின் 100 சுவாரசியமான மனிதர்களில் ஒருவராக தாய்லாந்து அரசரை அமெரிக்க பத்திரிகையான டைம் தேர்ந்தெடுத்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் அரசராக கடந்த அக்டோபர் மாதம் மகா வஜிரலாங்கோன் பதவி ஏற்றார்.   தற்போது 64 வயதாகும் அவர் தனது தந்தை பூமிபோல் அதுல்யதேஜ் மறைவுக்குப் பின் அரசவை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.   தாய்லாந்து அரசு உலகின் பழமையான மன்னராட்சி நாடுகளில் ஒன்றாகும்.

மகா வஜிரால்ங்கோன் பட்டத்து இளவரசராக இருந்த போது தனது செல்லப் பிராணிக்கு ராணுவத்தின் மிக உயர்ந்த விருதைக் கொடுத்து கௌரவித்துள்ளார்.    தாய்லாந்தில் இருந்து 6000 மைல்கள் தூரமாக உள்ள லண்டன் நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற தாய்லாந்து உணவகத்தில் இருந்து சாப்பாடு பார்சல் ஆர்டர் செய்துள்ளார்.

உலகின் மிகப் பணக்கார அரசான தாய்லாந்து அரசரின் சொத்துக்கள் வெகு காலங்களுக்கு முன்பே 3000 கோடி அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டிருந்தது.   முந்தைய அரசர் மீது உள்ள அபிமானம் மக்களிடையே இன்றும் தொடர்கிறது.    அமெரிக்காவின் நீண்ட நாள் நட்பு நாடாக தாய்லாந்து மட்டுமே ஆசியாவில் உள்ளது.

தாய்லாந்து மன்னர் இதுவரை மூன்று முறை விவாகரத்து செய்துள்ளார்.  இவரை அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிகையான டைம் உலகின் 100 சுவாரசியமான மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளது.