டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்களின் பட்டியலில் இடம்பெற்றார் ‘ஜமால் கஷோக்கி’

டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்களின் பட்டியலில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Jamal

சவுதி இளவரசர் சல்மானை விமர்சித்து தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளார் ஜமால் கஷோக்கி கடந்த அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். அவரை சவுதி அதிகாரிகள் தான் கொலை செய்தனர் என துருக்கி குற்றம்சாட்டி வந்த நிலையில் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. இது உலகளவில் சவுதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால் ஜமால் கொலை செய்யப்பட்டதாக சவுதி ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், ஜமால் கஷோக்கியின் பெயரை சிறந்த நபர்களின் பட்டியலில் டைம்ஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. ஜமால் கஷோக்கியின் பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகையில், “ சவுதி அரேபியவின் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர் ஜமால் கஷோக்கி. இவர் சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது “ என கூறியுள்ளது.

ஜமால் மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமின் புதின், பிளாக் பந்தர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரியான் கூக்லர், தென் கொரிய அதிபர் மூன் ஜெ இன், இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க் உள்ளிட்டோரின் பெயரும் டைம்ஸ் இதழில் இடம்பெற்றன.