எம்எக்ஸ் ப்ளேயர் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகும் ‘டைம்ஸ் ஆஃப் மியூஸிக்’ ரியாலிட்டி ஷோ…..1

‘டைம்ஸ் ஆஃப் மியூஸிக்’ எனும் புதிய ரியாலிட்டி ஷோவில் முக்கிய பாலிவுட் இசையமைப்பாளர்கள் 20 பேர் பல்வேறு அணிகளாகப் பிரிந்து, பரஸ்பரம் தங்களின் பிரபலமான பாடல் மெட்டுகளை மாற்றிக் கொண்டு புதிதாக உருவாக்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பப்பி லஹரி, ராஜேஷ் ரோஷன், ப்யாரிலால், ஆனந்த்ஜி, யூஃபோரியா, விஜு ஷா உள்ளிட்ட மூத்த இசைக் கலைஞர்கள் இடம் பெறுகின்றனர்.

விஷால் தத்லானி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 11 பகுதிகள் அடங்கியது

மொத்தம் 22 பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளன. எம்எக்ஸ் ப்ளேயர் ஸ்ட்ரீமிங் தளத்தில் இந்த நிகழ்ச்சி வெளியாகும்.