சென்னை – கூடூர் ரெயில் தடத்தில் இரு தினங்கள் ரெயில் சேவை மாற்றம்

சென்னை

கூடூர் – பேடப்பிரியா ரெயில் தடத்தில் பொறியியல் பணிகள் நடப்பதால் இன்றும் நாளையும் ரெயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுளது.

சூலூர்பேட்டையில் இருந்து  செண்டிரல் புறநகர் ரெயில் நிலையம் செல்லும் ரெயில் ஒன்றரை மணி நேரம் தாமதாக செல்ல உள்ளது.   விஜயவாடாவில் இருந்து சென்னை வரும் பினாகினி விரைவு ரெயில் கூடூரில் 80 நிமிடம் நிற்பதால் சென்னைக்கு 80 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.   அதே போல சென்னையில் இருந்து விஜயவாடா செல்லும் அதே ரெயில்  தாமதாமாக கிளம்பும்.

பூரியில் இருந்து சென்னை வரும் விரைவு ரெயில் கூடூரில் 30 நிமிடம் நிற்பதால் அந்த ரெயிலும் தாமதமாக சென்னை வந்தடையும்.   இது தவிர மேலும் இரு விரைவு ரெயில்களின் சேவை நேரங்களும் தாமதமாக்கப்பட்டுள்ளன.

இன்றும் நாளையும் செண்டிரலில் இருந்து ஆவடிக்கு பிற்பகல் 2.05க்கு இயங்கும் ரெயில் மற்றும் ஆவடியில் இருந்து செண்டிரலுக்கு 2.50 மணிக்கு இயங்கும் ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

You may have missed