ஆர்டிஜிஎஸ் பணப் பரிமாற்றத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு! 26ந்தேதி முதல் அமல்

டில்லி:

ங்கிகளில், ஆர்டிஜிஎஸ் முறையில், ஆன்லை பணப் பரிமாற்றத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய நேரம் வரும் 26ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி, காலை 7 மணி முதல் இரவு 7:45 மணி வரையிலும் வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை  செய்ய முடியும்.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஆகஸ்ட் 26 முதல் ஆர்டிஜிஎஸ்  பரிவர்த்தனைகள் காலை 7மணி முதல் தொடங்கும். “ஆர்டிஜிஎஸ் அமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு, ஆர்டிஜிஎஸ் இயங்கும் நேரத்தை நீட்டிக்கவும், வாடிக்கை யாளர்களும் வங்கிகளும் காலை 7 மணி முதல் நடவடிக்கை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று  தெரிவித்துள்ளது.

தற்போது ஆர்டிஜிஎஸ் அமைப்பு வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்காக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், 26ந்தேதி முதல் இரவு 7:45 மணி வரையிலும் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.