திண்டிவனம் தொகுதி பெண் எம் எல் ஏ வுக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம்

திண்டிவனம் தொகுதி பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக அமைச்சர்கள், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போது திண்டிவனம் தொகுதி பெண் சட்டமன்ற உறுப்பினர் சீத்தாபதி க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார்.

இவரது கணவர் சொக்கலிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.