அமெரிக்காவில் பரபரப்பு: நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அதிபர் டிரம்ப் மினி சிலை அமைப்பு

புரூக்ளின்:

நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக  அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவில் சிறிய ரக சிலைகள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு சிறிய அளவிலான ட்ரம்ப் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில் “என்மீது சிறுநீர் கழிக்கவும்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இது காண்போரை முகம்சுழிக்க வைத்துள்ளது. மேலும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் சிறந்த அதிபராக செயல்படவில்லை, அந்த ஆத்திரத்தில்தான் இப்படி ஒரு சிலையை வடிவமைத்து சாலையின் நடுவே வைத்துள்ளேன் என சிலையை வடிவமைத்த  பில் கேப்லே என்பவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்ப் நிர்வாண சிலைகளை வடிவமைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.