திருவண்ணாமலையில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் பவர்கட்டான சமயத்தில் புதிதாக வெளிவந்துள்ள 2000 நோட்டின் கலர் ஜெராக்ஸை கொடுத்து சாதுர்யமாக நழுவிச் சென்றிருக்கிறார் ஒரு குடிமகன்.

tasmac

ரூ.200-க்கு குடித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டின் ஜெராக்ஸை கொடுக்க இருட்டில் நல்ல நோட்டுக்கும் போலி நோட்டுக்கும் வித்தியாசம் தெரியாத டாஸ்மாக் பணியாளர் 2000 ரூபாய் கலர் ஜெராக்ஸை பெற்றுக்கொண்டு ரூ.1,800 மீத சில்லறை கொடுத்துள்ளார். டாஸ்மாக்கின் மேனேஜர் பணத்தை வங்கிக்கு எடுத்துச் சென்றபோதுதான் அது போலி என்று தெரியவந்திருக்கிறது.
இதே போன்ற சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரின் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அங்கு ஒரு காய்கறி கடைக்காரர் புதிய 2000 நோட்டின் கலர் ஜெராக்ஸை வாங்கி ஏமாந்தது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூபாய் நோட்டு தடை தமிழகத்தின் டாஸ்மாக் விற்பனையில் பெரிய சரிவை ஏற்ப்படுத்தியிருக்கிறது. பல இடங்களில் டாஸ்மாக் விற்பனை விகிதம் 15% முதல் 20% வரை நஷ்டமடைந்திருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் டஸ்மாக்குகள் அரசு நிறுவனமாதலால் அங்கு பழைய நோட்டுக்களை ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் டாஸ்மாக்குகளில் பழைய நோட்டுக்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று உறுதியாக அரசு ஆணை தங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பவ்வுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்களின் யூனியன் பொதுச்செயலர் டி.தனசேகரன் குறிப்பிட்டுள்ளார்.