கர்நாடகாவில் நாளை ‘திப்பு ஜெயந்தி’:  பாஜக. எதிர்ப்பு – போலீஸ் குவிப்பு

பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் நாளை  திப்பு சுல்தான் பிறந்தநாளையாட்டி ‘திப்பு ஜெயந்தி’ கொண் டாடப்படுகிறது. இதற்கு பாரதியஜனதா எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக  அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில்   நவம்பர் 10-ம் தேதி திப்புசுல்தான் பிறந்த நாளை ‘திப்பு ஜெயந்தி’ என்று அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அதை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இதற்கு கர்நாடகாவில் உள்ள  பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆனால், திட்டமிட்டபடி திப்பு ஜெயந்தியை கர்நாடக அரசு கொண்டாடி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நாளையும் பாஜக உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், மாநிலத்தின் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி