சென்னை,

திருச்செந்தூர் கோயில் பரிகார மண்டம் இன்று காலை திடீரென இடித்து விழுந்து விபத்து  ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

60 ஆண்டு பழமையான அந்த மண்டபம் இடிந்ததற்கான காரணம் தெரியவில்லை.  இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர் ஈடுபட்டனர்.

மண்டபம் இடிந்ததுவிழுந்தததில் பெண் மரணம் காரணமாக,  பக்தர்கள் கோவிலிலிருந்து வெளியேற்றப்பட்டு கோவிலில் நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது பரிகார பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணான பேச்சியம்மாள்  குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்து உள்ளார்.  மேலும் காயமடைந்த கந்தசாமி, மற்றும் ஆறுமுகத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும்,  திருக்கோயில்களில் உள்ள கட்டட உறுதி தன்மையை ஆராயவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.