சென்னை,

மிழகத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டி ருக்கிற நிலையில்,  திருச்சியில் எம்ஜிஆர் விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து டிராபிக் ராமசாமி அவசர வழக்கு தாக்கல் செய்தார்.

பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், விளம்பர போர்டுகள் வைப்பதற்கு, அதிகாரிகள் அனுமதி அளித்தாலும், அவற்றில், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். ‘ஸ்பான்சர்’ செய்பவர்களின் புகைப்படமும், இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று திருச்சியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதையடுத்து நடைபெற்ற விசாரணையின்போது, திருச்சியில் எம்ஜிஆர் விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எத்தனை பேனர்கள் அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள  என்பது குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், உயிருடன் இருப்பவர்கள் படங்களை பேனர்களில் வைக்ககூடாது என்று தனி நீதிபதி வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை உடனடியாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.