திருமழிசை காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..

சென்னை:

சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையை தமிழக  முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இன்று மாலை  நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து,  மார்க்கெட்டை மூடி சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதற்கு பதிலாக பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசை பகுதியில் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்யக் கூடிய அளவுக்கு 200 கடைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 20 அடி இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் புதிய காய்கறி சந்தையை முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இன்று நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன்  வருகின்றனர். சிஎம்டிஏ அதிகாரிகளும் சென்றனர்.

கார்ட்டூன் கேலரி