ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் நேரில் வாழ்த்து

சென்னை:

திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார்.

திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்ப்டடார்.


இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கóட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் இன்று ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.