திருப்பதி : செப்டம்பரில் எட்டு வித தரிசன சேவைகள் ரத்து
திருப்பதி
இந்த மாதம் விழாக்களை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட எட்டு வகையான தரிசன சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் வருடாந்திர பிரம்மோத்சவம் நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி மாத இறுதியில் நவராத்திரி வருவதால் செப்டம்பரில் வருடாந்திர பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. அக்டோபரில் நவராத்திரி உத்சவம் நடைபெற உள்ளது.
கோயில் தூய்மைப்பணியான ஆழ்வார் திருமஞ்சனம் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் பிறகு செப்டம்பர் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருப்பதி பிரம்மோத்சவ விழா தொடங்குகிறது. இந்த விழா வரும் 21 ஆம் தேதி உடன் நிறைவு பெறுவதால் அன்று கொடியிறக்கத்துடன் முடிவு அடைகிறது.
இந்த பிரம்மோத்சவத்தை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதனால் மூத்த குடிமக்கல், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், பரிந்துரை கடித தரிசனங்கல் , நன்கொடையாளர்கள் தரிசனம், ராணுவ வீரர் தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர் தரிசனம், மற்றும் ஆர்ஜித சேவை தரிசனம் உள்ளிட்ட 8 வழிபாட்டு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.