விமரிசையாக நடைபெற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழா…. நிறைவு

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த சில நாட்களாக  கோலாகலமாக  நடைபெற்று வந்தது. இறுதிநாளான நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் புனித குளத்தில் இறங்கி நீராடினர்.

அதைத்தொடர்நது, நேற்று இரவு ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா கொடி இறக்கப்பட்டது.

கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருப்பதி பிரமோற்சவ திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரமோற்வ திருவிழா நாளின்ன்போது, தினசரி லை, மாலை இருவேளையும் மலையப்ப சுவாமி 18 வாகனங் களில் நான்கு மாட வீதிகளில் ஒய்யாரமாக வலம் வந்தார். சுவாமி திருவீதி உலாவின் போது,   ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடியும்,  பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி, கோலாட்டம், பரத நாட்டியம் ஆடிக்கொண்டு மாட வீதிகளில் வலம் வந்தனர்.

மாட வீதிகளில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். மாட வீதியின் இரு புறத்திலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர்.

நிறைவு நாளான நேற்று, ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள்  புனித நீராடினர். தொடர்ந்து நேற்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.

பிரமோற்சவம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இரவு 7 மணிக்கு மேல் கருடன் உருவம் வரையப்பட்ட கொடியை அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க இறக்கினர். அத்துடன் விழா நிறைவு பெற்றது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Brahmotsavam Flag descended, Huge Devotees Rush in Tirumala Tirupati, Tirupathi Brahmotsavam celebration end, விமரிசையாக நடைபெற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழா.... நிறைவு
-=-