திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

--

திருப்பதி: திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுதலங்களில் வழிபாடு நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திராவில் திருப்பதி கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அனுமதி தரப்பட்ட சில நாட்களில் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட, மீண்டும் கோவில் அடைக்கப்பட்டது. இந் நிலையில், திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளி்யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது: திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வரும் 30ம் தேதி வரையில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.