’’வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுக்க ஏழுமலையானிடம் துட்டு இல்லை’

உலகிலேயே பணக்கார சாமி என்று திருப்பதி ஏழுமலையானை அழைக்கிறோம்.

அவரை தரிசிக்க தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம்.

அவர்கள், உண்டியலில் கத்தை, கத்தையாகப் பணம் கொட்டுவதும் வழக்கம்.

ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு மேலாகத் திருப்பதி கோயில் மூடப்பட்டுள்ளது.

இதனால் திருப்பதி சாமிக்கு பெரும் இழப்பு.

‘’ ஊரடங்கால் ,400 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க , கோவில் நிர்வாகத்திடம் கை இருப்பு இல்லை என்றால் நம்புவீர்களா?

ஆனால், அது தான் உண்மை.

ஏற்கனவே கையில் இருந்த பணத்தை வைத்து ஊழியர்களுக்கான ஊதியம், பென்ஷன் மற்றும் தினசரி செலவுகளுக்கு 300 கோடி ரூபாய் காலியாகி விட்டது

இப்போது ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவும், அன்றாட செலவுகளுக்கும் போதுமான பணம் இல்லை.

‘’ ஏழுமலையான் பெயரில் வங்கிகளில் 8 டன் தங்கக் கட்டிகள் இருப்பும், 14 ஆயிரம் கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதியும் உள்ளது. ஆனால் அதைத் தொடாமல், தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க யோசித்து வருகிறோம்’’ என்கிறார்கள், திருப்பதி கோயில் அதிகாரிகள்.

– ஏழுமலை வெங்கடேசன்