வைகுண்ட ஏகாதசி : திருப்பதி வாழ் மக்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள்

திருப்பதி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

கொரோனா அச்சுறுத்தலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு மக்களை அனுமதிப்பது நிறுத்தப்பட்டது.  ஊரடங்கில் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி தற்போது முன்பதிவு செய்தோருக்கு மட்டும் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

வரும் 25 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற உள்ளது.  இந்த கால கட்டத்தில் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு முன்பதிவு டிக்கட்டுகள் அளிக்கப்பட்டு விற்பனை தொடங்கி உள்ளன்.  இந்த நாட்களில் தினசரி  17 முதல் 18 மணி நேரத்துக்கு 35000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் நேற்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி டிக்கட்டுகள் மையத்தைப் பார்வையிட்டார்.  அதன் பிறகு அவர் திருப்பதியில் வசிக்கும் மக்களுக்கு வைகுண்ட ஏகாதசிக்காக இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.