Random image

திருப்பதி கோவில் கும்பாபிஷேகம்….பக்தர்கள் தரிசனம் 9 நாட்களுக்கு ரத்து

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் திருப்பதியில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு மாற்று பாதை ஏற்பாடு செய்யப்படும்.ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.