திருப்பதி

ன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் அதிகம் பேர் கூடும் இடங்கள் மூடப்பட்டன.  அவ்வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட அனைத்து  வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.

தற்போதைய ஊரடங்கில் அந்தந்த இடங்களில் உள்ள பாதிப்பையொட்டி விதிகளில் தளர்வு செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   இன்று முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க விரும்பினால் திறக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதையொட்டி நாட்டில் பல வழிபாட்டுத் தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.   இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் கோவில் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.  நாளை மறுநாள் உள்ளூர் பக்தர்கள் மற்றும் 11 ஆம் தேதி முதல் வெளியூர் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.