திருப்பதி,

லகின் பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாளை உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் தினசரி வந்து தரிசித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், 10 வாரங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தான் அறிவித்து உள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலங்களாகும். ஆகவே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு வரும் ஏப்ரல் 7ந்தேதி முதல் 10 வாரங்களுக்கு எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வழங்கும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.