‘இடம் பொருள் ஏவல்’ வெளியீடு தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிக்கை….!
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘இடம் பொருள் ஏவல்’. லிங்குசாமி தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.
பொருளாதார நெருக்கடியால் இப்படத்தை வெளியிடமுடியாமல் தவித்தனர். தற்போது லிங்குசாமி தனது பைனான்ஸ் பிரச்சினையிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிகிறது. ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ளது.
Official :- #IdamPorulYeaval release date is not finalised yet says producer #SubashChandraBose … official date will be announced later. @VijaySethuOffl @seenuramasamy #vishnuvishal @thirupathibroth @dirlingusamy pic.twitter.com/5oNkhQqK9W
— Johnson PRO (@johnsoncinepro) May 22, 2020
இது தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் “எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் ட்விட்டரில் செய்தி பரப்பி வருவதாக தெரிகிறது.எங்கள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளைப் பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் .