திருப்பதி கோவில் : மீண்டும் தரிசனம் தொடங்கியது

திருப்பதி

திருப்பதி கோவிலில் 12 மணியில் இருந்து மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் பிரம்மோத்சவம் நடைபெற உள்ளது.   அந்த உற்சவத்துக்கு முன் வரும் செவ்வாய்கிழமை அன்று அதாவது இன்று கோவில் நடை சார்த்தப்பட்டு சுத்தம் செய்வது வழக்கம்.  அதன் பிறகு வரும் 17 ஆம் தேதி அன்று புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது.

அதை ஒட்டி இன்று காலை 6 மணி முதல் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.   கோவிலில் பணிபுரியும் அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்றிணைந்து கோவிலை சுத்தம் செய்தனர்.   இந்த சுத்தம் செய்யும் பணி கலை 11 மணி வரை நடைபெற்றது.   அதன் பிறகு பூஜைகள் தொடங்கப்பட்டன

தரிசனம் சரியாக 12 மணிக்கு தொடங்கி உள்ளது.   அதை ஒட்டி தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் இன்று பகல் பனிரெண்டு மணி முதல் அனுமதிக்கப்பட்டனர்.