பிளாஸ்டிக் தடை : அட்டைப் பெட்டிகளில் திருப்பதி லட்டு

திருப்பதி

பிளாஸ்டிக் தடையால் இனி திருப்ப்தி லட்டுக்களை அட்டைப்பெட்டியில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி திருமலையில் சென்ற மாதம் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் விதிக்க தேவஸ்தானம் தடை விதித்தது. எனவே அங்குள்ள கடைக்காரர்கள் 50 மைக்ரானுகு கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்களை உபயோகப்படுத்துவதை நிறுத்தி உள்ளனர். கோவிலில் வழங்கப்படும் லட்டுகளை எடுத்துச் செல்ல அங்கு பிளாஸ்டிக் பைகள் விற்கப்பட்டு வந்தன.

அவை 50 மைக்ரானுக்கு மேல் உள்ளதால் மாற்றுத் தீர்வு காணும் வரை தேவஸ்தானம் உபயோகிக்க முடிவு செய்தது. தடை விதிக்கப்பட்ட போது தேவஸ்தானத்தில் 1 லட்சம் பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. அவைகளை இருபு தீரும் வரை விற்க முடிவு செய்தது.

அந்த கவர்களுக்கு மாற்றாக அட்டைப் பெட்டி உபயோகபடுத்த சோதனைகள் மேற்கொள்ளபட்டன. வெங்கடேச பெருமாள் படம் அச்சடிக்கபட்ட அட்டைப் பெட்டிகளில் லட்டுக்களை வைத்து 10 நாட்களுக்கு பிறகு சோதிக்கப்பட்டது.

லட்டுகளின் தரமும் சுவையும் மாறாமல் இருந்ததால் அட்டைப்பெட்டிகளில் வைத்து விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது 1 லட்டு, 2 லட்டுக்கள், மற்றும் 4 லட்டுக்கள் கொள்ளும் படியான அட்டைப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நேற்று சோதனை முயற்சியாக 100 அட்டைப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது/