டில்லி,

திருப்பதி லட்டுவுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது லட்டு. ஆரம்பித்தில் இதற்கு வரி விதிக்கப்பட்டது. பின்னர் ஆந்திர அரசும், தேவஸ்தான போர்டும் கேட்டுக்கொண்டதற்கிணங்க  திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுவுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி  அமலுக்கு வர உள்ளது. இதன் காரணமாக . பல்வேறு பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில்,  திருப்பதி லட்டு மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.