ஆந்திராவில் சோகம்: திருப்பதி எம்.பி. கொரோனாவுக்கு பலி…

திருப்பதி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திருப்பதி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பால்லி துர்கா பிரசாத் ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் திருப்பதி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. பால்லி துர்கா பிரசாத் (வயது 64). ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான இவர், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்க  பிரதமர் மோடி அவரது டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பல்லி துர்கா பிரசாத் அவர்களின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியது.அவர் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர்.ஆந்திராவின் வளர்ச்சியில் அவரது பங்கு மிக அதிகம் என பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி