திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும்.
 
இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
1tirupathgi1-copy
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 3–ந் தேதியில் இருந்து 11–ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
3–ந்தேதி மாலை கொடியேற்றமும், இரவு பெரிய சேஷ வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது
4–ந் தேதி காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா,
5–ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா,
6–ந் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா,
7–ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் உற்சவர் பல்லக்கில் வீதிஉலா, இரவு தங்க கருட வாகன                       வீதிஉலா ஆகியவை நடக்கிறது.
8–ந் தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை தங்கத் தேரோட்டம், இரவு யானை வாகன வீதி உலா,
9–ந் தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகனவீதி உலா,
10–ந் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதி உலா,
11–ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.