திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள ஒன்றுக்கு 2,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 11ம் தேதி 6 மணிவரை மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்றும், 12ம் தேதி முதல் இலவச தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அர்ச்சகர்களுக்கு கொரோனா உறுதியானதால் தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.