திருமலை: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இன்று (செப்டம்பர் 19ம் தேதி) தொடங்கும் பிரமோற்சவம்  27ம் தேதியுடன் முடிவடைகிறது. நடப்பாண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,   பிரமோற்சவத்தை கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாய் நடத்துவதாக  தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  லருடாந்திர பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி முதல்நாள் விழா  இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இன்று மாலை சரியாக 6.03 மணி முதல் 6.30 மணியளவில் பிரம்மோற்சவ விழாவின் கொடியேற்றம் விமரிசையாக நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து, பெரிய சேஷ வாகனத்தில் எம்பெருமான் வீதி உலா வருவார். ஆனால், இந்த ஆண்டு  கோவிலுக்குள்ளேயே ஏகாந்தமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக,  பிரம்மோற்சவ விழாவின் பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, விஸ்வ சேனாதிபதி உற்சவரை ஊர்வலமாக கொண்டு வந்து, ரங்கநாதர் மண்டபத்தில் எழுந்தருளச் செய்த அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளுடன் அங்குரார்ப்பணம் செய்வித்தனர்.

பிரம்மோற்சவ விழாவுக்காக  தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து  சுமார் 5 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

வரப்பட்ட 5 டன் மலர்களை கொண்டும், வண்ண மின் விளக்குகளை கொண்டும் திருமலை முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து.

பிரமோற்சவம்  வரும் 27ம் தேதியுடன் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

இந்தாண்டு கொரோனா பரவலால், பக்தர்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதுடன், மக்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு காலை மாடவீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.