திருப்பதி: செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது!

திருப்பதி:

திருப்பதியில் செம்மரங்கள் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டப்படுவதாக கிடைத்தத தகவலை அடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்தனர்.  அங்கு சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்கள் வெட்டுவதைக் கண்டு அவர்களை சுற்றி வளைத்தனர்.

போலீசாரை கண்டதும், மரத்தை வெட்டியவர்கள்  தப்பி ஓடி முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டையும் பொருட்படுத்தாமல் 36 பேர் தப்பியோடி விட்டனர்.

அவர்களில் நான்கு பேர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். அவர்களை  போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 33 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதான நான்கு பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி