திருப்பதி கோவிலில் நாளை காலை 11 மணி வரை தரிசனம் ரத்து

திருமலை:

திருப்பதி கோவிலில் நாளை  ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம்  தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

திருப்பதி கோவிலில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற விழாக்களின் முன்பு, கோவிலை சுத்தப்படுத்துவது வழக்கம்.  ஆந்திர வருட பிறப்பான உகாதி,  ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற சிறப்பு நாட்களுக்கு முன்பு ஆகமவிதிமுறைப்படி திருப்பதி கோவில் சுத்தம் செய்யப்படும்.

இந்த நிலையில் வரும் 17ந்தேதி திருப்பதியில்  ஆனிவார ஆஸ்தானம் நடைபெற இருப்பதால், கோவிலை சுத்தப்படுத்தும் பணி நாளை காலை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அப்போது, கோவிலில் உளள அனைத்து சன்னதிகளும் தண்ணீரால்  கழுவி சுத்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பகல் 12மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.