ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி

திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரம் எண்ணிக்கையில் 300 ரூபாய் கட்டண பக்தர்களும், 3 ஆயிரம் எண்ணிக்கையில் இலவச தரிசன பக்தர்களும் அடங்குவர்.

இந்நிலையில் நாளை முதல் இம்மாதம் 30ம் தேதி வரை 300 ரூபாய் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை மேலும் 3 ஆயிரம் வரை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அதிகரித்துள்ளது.

இதனால் ஏழுமலையான் கோயிலில் நாளொன்றுக்கு 12,750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.