திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் கொலை! போலீஸ் குவிப்பு!!

திருப்பூர்,

பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாரதியஜனதா கட்சியை சேர்ந்த முத்து என்பவர் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.

சம்பவத்தன்று மர்ம நபர்கள் அவரது கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.

திருப்பூர் முத்தணம்பாளயைம் பகுதியை சேர்ந்தவர் முத்து. பா.ஜ.,வின் திருப்பூர் மாவட்ட துணைத்லைவராக இருந்து வருகிறார்.

இவர் தனது வீடு அருகே உள்ள  ஒரு குடோனில் தனியாக இருந்தபோது,  மர்ம நபர்கள்  அவரை கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொன்றுள்ளனர்.

பின்னர் அவரது கைகளை புன்புறமாக கட்டி, அருகிலிருந்த மரத்தில் தொங்க விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்று திருப்பூர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.