திருப்பூர்: வெளி மாநிலங்களுக்கு தயாரித்து அனுப்பிய ஆடைகளுக்கான தொகை ரூ.5,000 கோடி வரை முடங்கியுள்ளதால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
கொரோனா தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால், ஒவ்வொரு நிறுவனமும், லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரையிலான தொகையை, வர்த்தகர்களிடமிருந்து வசூலிக்க முடியாமல் தவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; திருப்பூரில் உள்ள உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 6ம் தேதி முதல் மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பாத காரணத்தால், திருப்பூர் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி வரை வசூலாகாமல் உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.