திருப்பூர்: பேருந்து நிலைய கழிப்பிட கான்கிரீட் கூரை விழுந்து ஒருவர் பலி

--

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலைய கழிவறையின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அசோக் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

ஒருவர் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.