அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி

சென்னை:

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த இவருக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது இருதய வால்வில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு இன்று இரவு அல்லது நாளை அறுவை சிகிச்சை நடக்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது உடல் நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டறிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.