திருவள்ளூர் வங்கி கொள்ளை: வங்கி ஊழியர் உள்பட 3 பேர் கைது, நகைகள் மீட்பு

திருவள்ளூர்:

திருவள்ளுரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா நகை கொள்ளை வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான அடகு வைக்கப்பட்டிருந் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கியை திறக்க வந்தபோது வங்கியில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டும், கள்ளச் சாவிகள் போட்டும் திறக்கப்பட்டிருந்தது.

வங்கி உள்ளே  சென்று பார்த்த போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைககள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸார்  வழக்குப்பதிவு செய்து  மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வங்கியை பூட்டுக்களை கள்ளச்சாவி போட்டு திறந்திருப்பது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிட விசாரணையில், இந்த கொள்ளை விவகாரத்தில் வங்கி ஊழியர் ஒருவர் சம்பப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார்,  அவருக்கு உதவியாக இருந்த மேலும் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளையும் போலீஸார் மீட்டனர்.

வங்கி ஊழியரே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.   போலீஸார் அந்த மூன்று பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may have missed