திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 93 பேருக்கு கொரோனா: உயரும் பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3,749 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நோக்கி வேகமாக நகர ஆரம்பித்து இருக்கிறது. மாநிலத்திலேயே அதிகபட்ச பாதிப்பு சென்னையில் தான் உள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான  திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,656 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இன்று மட்டும் ஒரேநாளில் 93 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,749 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 2,245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி