கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் நாளை கொடியேற்றம்

திருவண்ணாமலை:

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி , திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை கொடியேற்றம்  நடைபெற உள்ளது.. அதைத்தொடர்ந்து டிசம்பர் 7-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா, மகா தீபம் ஏற்றப்படுவதுடன்  10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.  திருவிழாவை யொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை (டிச. 1-ம் தேதி) கொடியேற்றம் நடைபெறுகிறது.

முன்னதாக காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. நேற்று நேற்று சிம்ம வாகனத்தில் பிடாரியம்மன் உற சவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்றிரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து நாளை  அண்ணா மலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில்  (டிச. 1-ம் தேதி), பஞ்சமி திதி, உத்திராடம் நட்சத்தி ரம், அமிர்தயோகம் கூடிய சுப தினத்தில் காலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் விருச்சிக லக்னத் தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங் கள் முழங்க, மங்கள இசை ஒலிக்க கொடியேற்றம் நடைபெற உள்ளது. பின்னர், மகா தீபாராதனை காட்டப் படும். இதையடுத்து, 10 நாள் உற்சவம் தொடங்குகிறது.

பல்வேறு வாகனங் களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிகின்றனர். 6-ம் நாள் உற்சவத்தில் (டிச. 6-ம் தேதி) காலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும், இரவு வெள்ளி தேரோட்டமும் நடைபெறும்.

பின்னர் மறுநாள் (டிச. 7-ம் தேதி) காலை மகா தேரோட்டம் தொடங்குகிறது.  விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் பவனி வரவுள்ளனர். காலையில் தொடங்கி நள்ளிரவு வரை மகா தேரோட்டம் நடைபெறும். ஒரே நாளில் 5 தேர்கள் பவனி வருவது குறிப்பிடத்தக்கது.

விழாவின் முக்கிய நிகழ்வாக டிச. 10-ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.

மகா தீபத்தை பருவதராஜகுல வம்சத்தினர் ஏற்றவுள்ளனர். மகா தீபத்தை தொடர்ந்து, ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு தெப்பல் உற்சவம் நடைபெறும். இதைத்தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவம் டிச. 14-ம் தேதி நடைபெற்றதும், கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.