ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி:

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உடனடியாக தேர்தல் நடத்தை முறை அமலுக்கு வருவதாகவும் அறிவித்து உள்ளது.

திமுக தலைவரும்,, முன்னாள் முதல்வருமான  கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு  ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று மாலை  அறிவித்துள்ளது.

மனுதாக்கல் தொடங்கும் நாள்  ஜனவரி 3ம் தேதி

மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி

வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நாள்  ஜனவரி 11 முதல் 14 வரை

வாக்குப்பதிவு ஜனவரி  28ந்தேதி

வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெறும்.

இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.