ஒரிசா மாநிலத்தில் டிட்லி புயல் கரையை கடந்தது.

கோபால்பூர், ஒரிசா

ரிசாவுக்கும் ஆந்திராவுக்கும் இடையே டிட்லி புயல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கரையை கடந்தது.

வங்காள விரிகுடா கடலில் புதியதாக ஒரு புயல் சின்னம் உருவாகி இருந்தது. இந்த புயலுக்கு டிட்லி என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரிசா மாநிலத்தின் கோபால்பூருக்கும் ஆந்திர மாநில கலிங்கப்பட்டினத்துக்கும் இடையில் கரையை கடந்தது.

இதனால் ஒரிசா மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் மின்சார கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்துளன. ஒரிசாவின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 836 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

இன்றும் நாளையும் ஒரிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 1000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது. அவர்கள் ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.